ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி என்ஜினீயர் சாவு

ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி டிப்ளமோ என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2018-12-25 22:15 GMT
ராஜாக்கமங்கலம்,

நாகர்கோவில் அருகே வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் சகாயஜோஸ். இவருடைய மகன் சச்சின் ஜோஸ் (வயது 24). டிப்ளமோ என்ஜினீயர். இவர் நேற்று காலையில் தனது நண்பர் ஒருவரை பார்க்க மோட்டார் சைக்கிளில் குளச்சல் பகுதிக்கு சென்றார்.

அங்கு நண்பரை பார்த்து விட்டு மீண்டும் வீடு நோக்கி புறப்பட்டார். ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியை சென்றடைந்த போது மோட்டார் சைக்கிள் டயர் திடீரென வெடித்தது. இதனால் மோட்டார் சைக்கிள் சச்சின் ஜோஸின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சச்சின் ஜோசுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.

உயிருக்கு போராடிய அவர் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்