பஸ் சக்கரத்தில் சிக்கி வேன் டிரைவர் சாவு

காலவாக்கம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி வேன் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-12-25 22:15 GMT
திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கானத்தூரை அடுத்த உத்தண்டி சங்கோத்தியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 38) வேன் டிரைவர்.

இவர் நேற்று முன்தினம் இரவு 8½ மணிக்கு மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். காலவாக்கம் அருகே செல்லும்போது, திடீரென குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.

அப்போது பின்தொடர்ந்து வந்த அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி ஹரிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்து வந்த திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்