ஊத்துக்கோட்டை அருகே திருமண ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே திருமண ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-25 22:15 GMT
ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள முக்கரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது அன்னாவரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் வரதன். இவரது மகள் சிவகாமி (வயது 35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

திருமண ஏக்கத்தில் இருந்த சிவகாமி நேற்று கிராம எல்லையில் உள்ள தோப்புக்கு சென்றார். அங்குள்ள வேப்ப மரத்தில் தன்னுடைய சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.

அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் சிவகாமி தூக்குப்போட்டு கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று சிவகாமியை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவகாமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்