மீன்பிடிக்க சென்றபோது பரிதாபம் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
எண்ணூரில் கடலில் மீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானார்.
திருவொற்றியூர்,
எண்ணூரில் உள்ள நெட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா(27). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை தாழங்குப்பம் பகுதியில் இருந்து பைபர் படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
இரவு நேரத்தில் கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது தமிழ்மணி கடலுக்குள் தவறி விழுந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரசன்னா கடலில் குதித்து தேடி பார்த்தார். வெகு நேரம் தேடியும் அவரால் தமிழ்மணியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கரைக்கு திரும்பி வந்து கரையில் இருந்தவர்களிடம் இதுபற்றி தெரிவித்தார்.
உடனே தீயணைப்பு படையினருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கடலில் பிணமாக கிடந்த தமிழ்மணியை கரைக்கு கொண்டு வந்தனர்.
சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.