திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்

Update: 2018-12-25 21:45 GMT

திருச்செந்தூர், 

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவரை மருத்துவ அதிகாரி பொன்ரவி, டாக்டர் பாபநாசகுமார் ஆகியோர் வரவேற்றனர்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் சிகிச்சை அளிக்கப்படும் முறைகள் பற்றி கேட்டறிந்தார். தொடர்ந்து அவர், ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தமிழக அரசின் இலவச பிறப்பு சான்றிதழ் வழங்கினார். அப்போது அவருடன் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்