பாளையங்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து நகை–பணம் திருட்டு

பாளையங்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து நகை–பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2018-12-25 21:30 GMT

நெல்லை, 

பாளையங்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து நகை–பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–

நகை–பணம் திருட்டு

பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் மீட்பர்நகரை சேர்ந்தவர் அன்பின்ராஜ் (வயது 44). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டிற்குள் இருந்த ரொக்கப்பணம் ரூ.2 ஆயிரம் மற்றும் தங்க நகைகள், வீட்டில் உள்ள மற்ற பொருட்கள், ஆவணங்களை மர்மநபர்கள் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து அன்பின்ராஜ், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை–பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்