கட்சி விரோத செயல்களை சகித்துக் கொள்ள மாட்டோம் : தினேஷ் குண்டுராவ் எச்சரிக்கை
கட்சி விரோத செயல்களை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சி அமைந்து 7 மாதங்கள் ஆகிறது. இதில் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, கடந்த 6 மாதங்களாக சரியான முறையில் பணியாற்றவில்லை. மந்திரிசபை கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.
கட்சி கூட்டங்களில் பங்கேற்கவில்லை. அவரது துறை தொடர்பான பணிகளை மேற்கொள்ளவில்லை. மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்யவில்லை. அதன் காரணமாகவே அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்கியுள்ளோம். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை.
ரமேஷ் ஜார்கிகோளியுடன் பேசுவேன். அவர் கட்சியை விட்டு விலகமாட்டார். அவர் தொடர்ந்து கட்சி விரோத செயலில் ஈடுபட்டு வருகிறார். கட்சி கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி விரோத செயல்களை சகித்துக்கொள்ள மாட்டோம்.
கட்சி விரோத புகார்கள் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளோம். அந்த குழு ஆலோசித்து, கட்சிக்கு அறிக்கையை வழங்கும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்சியை விட பெரியவர்கள் யாரும் இல்லை. அனைவரும் கட்சியின் முடிவை ஏற்க வேண்டும். நிர்வாகிகள் யாரும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். இறுதியில் நீங்கள் பிரச்சினையில் மாட்டுவீர்கள்.
கட்சி விரோத செயல்களில் ஈடுபவர்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். மந்திரிசபை விரிவாக்கம் மூலம் வட கர்நாடகத்திற்கு நியாயம் பெற்று தந்துள்ளோம். பல்வேறு ஆலோசனைகளுடன் இந்த விரிவாக்கத்தை நடத்தி இருக்கிறோம். இந்த மந்திரிசபை விரிவாக்கத்தில் சமூகநீதியை நிலைநாட்டியுள்ளோம்.
சாதி, மண்டலம் போன்ற பல்வேறு காரணங்களால் ராமலிங்கரெட்டி போன்ற மூத்த தலைவர்களுக்கு மந்திரி பதவி வழங்க முடியவில்லை. வரும் காலத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் அவர் பொறுமையாக இருக்க வேண்டும். கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.