பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்யமாட்டோம் : ஷோபா எம்.பி. சொல்கிறார்

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2018-12-24 23:27 GMT
பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்துள்ளனர். இதனால் காங்கிரசில் மந்திரி பதவி கிடைக்காதவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் சுமுக நிலை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க நாங்கள் முயற்சி செய்ய மாட்டோம். ஆனால் எங்களை தேடி வருபவர்களை நாங்கள் வேண்டாம் என்று சொல்லமாட்டோம். கர்நாடக அரசியல் நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மந்திரி பதவி வழங்காமல் மூத்த தலைவர்களை காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது.

இவ்வாறு ஷோபா கூறினார்.

மேலும் செய்திகள்