கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி,
ஏசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சியில் தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதேபோல் கிறிஸ்தவர்களின் வீடுகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்களை கடந்த சில நாட்களுக்கு முன்பே தொங்கவிட்டனர். வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில்கள், அலங்கார செடிகளும் வைத்தனர். பண்டிகையையொட்டி திருச்சியில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நள்ளிரவு 12 மணி ஆனதும் ஏசு கிறிஸ்து பிறந்ததை உணர்த்தும் வகையில் குடில்களில் ஏசு கிறிஸ்து சொரூபம் வைக்கப்பட்டது.
திருச்சி மேலப்புதூர் புனித மரியன்னை ஆலயம், பாலக்கரை பழைய கோவில், பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா ஆலயம், மெயின்கார்டுகேட் தூய மரியன்னை ஆலயம், கல்லுக்குழி புனித அந்தோணியார் ஆலயம், பெரியமிளகுபாறை சந்தியாகப்பர் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பண்டிகையையொட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் சிலர் கேக் மற்றும் இனிப்பு வழங்கினர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். நள்ளிரவு 12 மணி ஆனதும் வாண வேடிக்கைகள் நடத்தப்பட்டது. இன்றும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.
இதேபோல் சமயபுரம் அருகில் உள்ள புரத்தாக்குடி புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை பீட்டர் ஆரோக்கியதாஸ் தலைமையில் கிறிஸ்தவர்கள் நேற்று நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இதில் புரத்தாக்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இருங்களூரில் உள்ள புனித தோமையர் ஆலயத்தில் பங்குத்தந்தை இன்னசென்ட் தலைமையிலும், கொணலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை சாம்சங் தலைமையிலும் பிரார்த்தனை நடைபெற்றது.