புதுச்சேரி மாநில அரசுக்கு, மத்திய அரசு இடையூறு அளிக்கிறது அமைச்சர் நமச்சிவாயம் குற்றச்சாட்டு
புதுச்சேரி மாநில அரசுக்கு, மத்திய அரசு இடையூறு அளிக்கிறது என அமைச்சர் நமச்சிவாயம் குற்றம் சாட்டி உள்ளார்.
காரைக்கால்,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பொதுப்பணித்துறை அமைச்சரும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத், வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், தமிழகத்தின் மேலிட பொறுப்பாளர் அருள்பெத்தையா, தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசிய தாவது:-
புதுச்சேரியில் ஏற்கனவே ஆட்சி நடத்திய அரசுகள் வாங்கிய கடனை, தற்போதைய காங்கிரஸ் அரசு வட்டியும், முதலுமாக திருப்பி செலுத்தி வருகிறது. இதனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறோம்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசை செயல்பட விடாமல் மத்திய அரசும், கவர்னரும் தொடர்ந்து இடையூறு அளித்து வருகிறார்கள். அதையும் மீறி நல்லாட்சி நடத்தி வருகிறோம்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும். ராகுல்காந்தி பிரதமரான அடுத்த 2 ஆண்டுகளுக்குள் புதுச்சேரியில் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்றுவோம்.
எனவே மத்திய அரசின் மக்கள் விரோத செயல் களையும், ஊழல்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க காங்கிரஸ் கட்சியினர் இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மத்திய அரசின் தோல்வி குறித்த கையேட்டை புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் வெளியிட்டார். அதை அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.