கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி - கலெக்டர் அண்ணாதுரை தகவல்

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-24 23:00 GMT
தஞ்சாவூர்,

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நடப்பாண்டு நிதிஉதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

தேவாலய சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சீரமைப்பு பணிக்காக ஒருமுறை நிதிஉதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதிஉதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். இதற்கான விண்ணப்படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப் பட்டுள்ளது.

இதை படியிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக மேலும் விவரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்