ஆக்கூர் பகுதியில் 3 நாட்களாக பரவலாக மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
ஆக்கூர் பகுதியில் 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
ஆக்கூர்,
நாகை மாவட்டம் செம் பனார்கோவில் அருகே ஆக்கூர், அன்னப்பன்பேட்டை, மடப்புரம், பூந்தாழை, மேலப்பாதி, கீழையூர், கருவாழைக்கரை, திருச்சம்பள்ளி, கிடாரங்கொண்டான், சஞ்சாநகரம், மேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் மழைநீர் செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் சிரமத்திற்குள்ளாகினர். இந்த மழையால் நெல், வாழை, கரும்பு, சோளம், நிலக்கடலை உள்ளிட்டவைகளை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி தொடங்கியதில் இருந்து விட்டு, விட்டு மழை பெய்தது. தற்போது உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மீண்டும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து இடைவிடாமல் பெய்தால் சாகுபடி செய்துள்ள பயிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாக வாய்ப்பு உள்ளது.
தற்போது பெய்து வருவதுபோல் விட்டு, விட்டு மழை பெய்தால் பாசனத்திற்கு போதுமானதாக இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக வருகிறது. இந்த சம்பா நெற்பயிர்கள் பொங்கலை முன்னிட்டு அறுவடை செய்யப்படும். இந்த நெற்பயிர்களுக்கு தற்போது பெய்து வரும் மழை பயனுள்ளதாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.