நெல்லையில் எம்.ஜி.ஆர். நினைவு தினம்

நெல்லையில் நேற்று எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2018-12-24 22:15 GMT
நெல்லை, 

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மனோகரன் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் பகுதி செயலாளர் எஸ்.டி.காமராஜ், சிறுபான்மைபிரிவு செயலாளர் மகபூப்ஜான், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, சங்கரன்கோவில் நகர துணை செயலாளர் சுவர்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் அமைப்பு செயலாளர் ஆர்.பி.ஆதித்தன் தலைமையில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம், நெல்லை மாநகராட்சி முன்னாள் துணைமேயர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகர் மாவட்ட தே.மு.தி.க.வினர் செயலாளர் முகமதுஅலி தலைமையிலும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையினர் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையிலும் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு மேலப்பாளையம் மண்டல அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் நெல்லை மாநகர் பகுதியில் பல இடங்களில் எம்.ஜி.ஆர். படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் செய்திகள்