சிங்கப்பெருமாள் கோவிலில் எம்.ஜி.ஆர். நினைவு நாள்

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா தலைமை தாங்கினார்.

Update: 2018-12-24 22:15 GMT
செங்கல்பட்டு,

ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சல்குரு, மறைமலைநகர் முன்னாள் நகரமன்ற தலைவர் கோபிகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். படத்துடன் ஊர்வலமாக கட்சி அலுவலகம் வந்த அ.தி.மு.க.வினர், கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும், புகைப்படத்துக்கு மலர்கள் தூவியும் மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் ஆலப்பாக்கம் ஊராட்சியிலும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவ படங்களுக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்