உலக எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் சைதை துரைசாமி வழங்கினார்

உலக எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் நுழைவுவாயில் முன்பு அன்னதானம், பெண்களுக்கு இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2018-12-24 22:30 GMT
சென்னை,

இந்த நிகழ்ச்சியை உலக எம்.ஜி.ஆர். பேரவையின் பிரதிநிதியும், மனிதநேய மையத்தின் தலைவருமான சைதை துரைசாமி தொடங்கிவைத்தார். அதன்படி 3 ஆயிரம் பேருக்கு அன்னதானமும், 250 பெண்களுக்கு இலவச சேலையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் ஆடை அலங்கார வடிவமைப்பாளர் முத்து, ‘உரிமை குரல்’ ராஜீ, பத்திரிகையாளர் துரை கருணா, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் போஸ், ‘ஓமப்பொடி’ பிரசாத், யாதவ் ராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சென்னை எம்.ஜி.ஆர். பக்தர்கள் ஒருங்கிணைப்புக்குழுவினர் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து பேரணியாக வந்து எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலியை செலுத்தினர். இந்த பேரணியை சைதை துரைசாமி தொடங்கிவைத்தார். அவர்கள் 5 ஆயிரம் பேருக்கு ஏற்பாடு செய்திருந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் சைதை துரைசாமி தொடங்கிவைத்தார்.

மேலும் செய்திகள்