மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர். நினைவுதினம் கடைபிடிப்பு அ.தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி

நாமக்கல் மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர். நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Update: 2018-12-24 22:30 GMT
நாமக்கல், 

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவுநாள் நேற்று அ.தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம் முன்னிலை வகித்தார்.

இதையொட்டி நாமக்கல் செலம்ப கவுண்டர் பூங்கா அருகே உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் ஒன்றியகுழு துணை தலைவர் ராஜா, சிறுபான்மையினர் நலபிரிவு மாவட்ட செயலாளர் சாதிக்பாட்ஷா மற்றும் நகர நிர்வாகிகள், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு நல்லிப்பாளையம் பகுதியிலும் நேற்று எம்.ஜி.ஆர். நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் கவுன்சிலர் செல்வமணி, வார்டு நிர்வாகிகள் விஜயகுமார், அருணாசலம், பாபுஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமரமங்கலம் பஸ் நிறுத்தம் மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை நாமக்கல் மாவட்ட செயலாளர் சந்திரசேகர், வக்கீல்கள் பரணீதரன், பிரபாகரன், நிலவள வங்கி தலைவர் சக்திவேல், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் துரைசாமி, முன்னாள் தலைவர் பழனிசாமி, முன்னாள் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மோகனூரில் எம்.ஜி.ஆர். நினைவுதினத்தையொட்டி மோகனூர் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு மோகனூர் ஒன்றிய செயலாளர் கருமண்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தங்கமுத்து, துணை செயலாளர் சிவஞானம், பொருளாளர் தாவீது, மாவட்ட மாணவர் அணி செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கொமரிபாளையம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராமலிங்கம். ஒன்றிய அவைத் தலைவர் பொன்னுசாமி, ஒன்றிய பொருளாளர் பன்னீர்செல்வம், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு உறுப்பினர்கள் ராக்கியண்ணன், குப்புசாமி, கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் மோகனூர் ஒன்றியத்திற்குட்பட்ட வளையப்பட்டி எஸ்.வாழவந்தி உள்பட பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பள்ளிபாளையம் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கட்சியினர் ஊர்வலமாக சென்று பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வெள்ளியங்கிரி, ஜெ.பேரவை செயலாளர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ரவி, செல்லத்துரை, மோகனசுந்தரம், மாதேஸ்வரன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெய்கணேஷ், ஜெயாவைத்தி மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோட்டில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பஸ் நிலையம் அருகில் அண்ணாலை முன்பு எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். இதில், 1-வது வார்டு செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட துணை செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மவுன ஊர்வலம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்