போலி ஆவணங்கள் மூலம் ஒரே வீட்டை 2 பேருக்கு விற்று மோசடி 2 பேர் கைது

போலி ஆவணங்கள் மூலம் ஒரே வீட்டை 2 பேருக்கு விற்று மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-23 23:00 GMT
மும்பை, 

போலி ஆவணங்கள் மூலம் ஒரே வீட்டை 2 பேருக்கு விற்று மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மகாடாவில் வீடு

மும்பை விக்ரோலியை சேர்ந்த நபர் மகாடாவில் வீடு வாங்க ஆசைப்பட்டு அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் (வயது38) என்பவரை அணுகினார். இவர் தனக்கு மகாடாவில் உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும், கன்னம்வார் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மகாடா கட்டிடத்தில் வீடு வாங்கி தருவதாகவும் உறுதி அளித்தார்.

இதனை நம்பிய நபர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அரவிந்திடம் ரூ.23 லட்சம் கொடுத்து உள்ளார். இதையடுத்து அரவிந்த் மகாடா வீட்டிற்கான பத்திரத்தை அவரிடம் கொடுத்து உள்ளார். இதையடுத்து பத்திரத்தை பெற்ற நபர் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது அந்த வீட்டில் மற்றொரு நபர் வசித்து வந்தது தெரியவந்தது.

2 பேர் கைது

அந்த வீட்டில் இருந்தவர், ஹரிஷ் ஜெயின் என்பவரிடம் ரூ.15 லட்சம் கொடுத்து வீட்டை பெற்றதாக தெரிவித்தார். இதையடுத்து பத்திரத்தை கொண்டு மகாடா அலுவலகம் சென்று விசாரித்த போது, போலி ஆவணம் மூலம் ஒரே வீட்டை 2 பேருக்கு விற்று மோசடி செய்தது தெரியவந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட 2 பேரும் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்த், ஹரிஷ் ஜெயின் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்