செல்போனில் ஆபாச படம் பார்த்ததால் வந்த வினை: கொலையான 5-ம் வகுப்பு மாணவன் உடல் மீட்பு சிறுவர்கள் 2 பேர் கைது

அந்தேரியில் கொலை செய்யப்பட்ட 5-ம் வகுப்பு மாணவனின் உடல் மீட்கப்பட்டது. அவனை கொலை செய்த சிறுவன் மற்றும் உடந்தையாக இருந்த அவனது நண்பனையும் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-12-23 23:00 GMT
மும்பை,

அந்தேரியில் கொலை செய்யப்பட்ட 5-ம் வகுப்பு மாணவனின் உடல் மீட்கப்பட்டது. அவனை கொலை செய்த சிறுவன் மற்றும் உடந்தையாக இருந்த அவனது நண்பனையும் போலீசார் கைது செய்தனர். செல்போனில் ஆபாச படம் பார்த்ததால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

உடல் மீட்பு

மும்பை அந்தேரி, சாக்கிநாக்கா பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன் கடந்த வியாழக்கிழமை இரவு மாயமானான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவன் 5-ம் வகுப்பு மாணவனை கொலை செய்து அந்தேரி - குர்லா ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் உடலை வீசியதாக கூறினான். எனினும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் சிறுவன் வீசியதாக கூறப்பட்ட கால்வாயில் இருந்து போலீசார் 5-ம் வகுப்பு மாணவனின் உடலை மீட்டனர்.

செல்போனில் ஆபாசபடம்

இதையடுத்து சிறுவன், 5-ம் வகுப்பு மாணவனை கொலை செய்தது உறுதியானது. போலீசார் சிறுவனிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.

15 வயது சிறுவன் பெற்றோரின் செல்போனில் வீடியோகேம் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளான்.

சமீபத்தில் சிறுவன் வீடியோகேம் விளையாடிய போது தவறுதலாக ஆபாச படத்தை பார்த்து உள்ளான். பின்னர் அவன் தொடர்ந்து ஆபாச படம் பார்க்க தொடங்கி உள்ளான்.

சிறுவர்கள் கைது

சம்பவத்தன்று சிறுவன் செல்போனில் ஆபாச படம் பார்த்து உள்ளான். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 5-ம் வகுப்பு மாணவன் அந்த வழியாக சென்றுள்ளான். இதையடுத்து அவன் மாணவனை வீட்டிற்குள் அழைத்து சென்று தகாத உறவில் ஈடுபட முயன்று உள்ளான். அப்போது மாணவன் அவனிடம் இருந்து தப்பிக்க சத்தம் போட்டு உள்ளான். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் மாணவனை கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளான். பின்னர் வீட்டில் இருந்த சூட்கேசில் சிறுவனின் உடலை அடைத்து சாக்கடை கால்வாயில் வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல நடித்து உள்ளான்.

மேலும் சம்பவத்தை திசைத்திருப்ப நண்பன் ஒருவனின் செல்போனில் இருந்து மாணவனின் தந்தையிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளான். இதையடுத்து போலீசார் 5-ம் வகுப்பு மாணவனை கொலை செய்த 15 வயது சிறுவன் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த 15 வயது நண்பனையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்