சைக்கிளில் உலகை சுற்றிய புனே இளம்பெண் ஆசிய அளவில் சாதனை படைத்தார்
சைக்கிளில் வேகமாக உலகத்தை சுற்றி புனேயை சேர்ந்த இளம்பெண் ஆசிய அளவில் சாதனை படைத்து உள்ளார்.
மும்பை,
சைக்கிளில் வேகமாக உலகத்தை சுற்றி புனேயை சேர்ந்த இளம்பெண் ஆசிய அளவில் சாதனை படைத்து உள்ளார்.
புனே இளம்பெண்
புனேயை சேர்ந்தவர் வேதங்கி குல்கர்னி. 20 வயதான இவர் இங்கிலாந்தில் உள்ள போர்னேமவுத் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேலாண்மை பட்டம் படித்து வருகிறார்.
சைக்கிளில் வேகமாக உலகத்தை சுற்றி சாதனை படைக்க விரும்பிய மாணவிக்கு, அவரது தந்தை விவேக் குல்கர்னி மற்றும் தாய் பச்சை கொடி காட்டினர். இதையடுத்து மாணவி கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரத்தில் வைத்து சைக்கிளில் உலகம் சுற்றும் பயணத்தை தொடங்கினார். அங்கு இருந்து பிரிஸ்பேன் நகரத்திற்கு சென்றார்.
சாதனை படைத்தார்
பின்னர் விமானம் மூலம் நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் நகருக்கு சென்றார். அவர் நியூசிலாந்து முழுவதும் சைக்கிளில் வலம் வந்தார். இதையடுத்து அவர் கனடா, ஐரோப்பா நாடுகளில் சைக்கிள் பயணம் செய்தார். பனி மழை பொழியும் ஐஸ்லாந்தில் இருந்து போர்சுக்கல், ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து வழியாக ரஷியாவிற்கு சென்றார்.
ரஷியாவில் இருந்து இந்தியா வந்த அவர் இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் மேற்கொண்டார். நேற்று அதிகாலை கொல்கத்தா நகரம் சென்றடைந்தார். இதன் மூலம் 159 நாட்களில் 29 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு 14 நாடுகளில் சுற்றிய வேதங்கி குல்கர்னி, ஆசிய அளவில் சைக்கிளில் வேகமாக உலகை சுற்றியவர் என்ற சாதனையை படைத்தார்.
துரத்திய கரடி
வேதங்கி குல்கர்னி எளிதாக இந்த சாதனையை அடைந்துவிடவில்லை. கடும் குளிர், கடும் வெயிலில் தினமும் சுமார் 300 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டி இந்த சாதனையை படைத்து உள்ளார். கனடாவில் பனிக்கரடி ஒன்று வேதங்கியின் சைக்கிளை துரத்தியது. ஸ்பெயின் நாட்டில் கத்தி முனையில் மிரட்டிய கொள்ளையர்கள் இவரிடம் இருந்த பொருட்களை பறித்து சென்றனர். இவ்வாறு பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் தான் இந்த சாதனையை படைத்து உள்ளார்.
இது போன்ற காரணங்களாலும் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாலும் பல நாடுகளுக்கு செல்வதில் அவருக்கு தாமதம் ஏற்பட்டது. சரியான நேரத்தில் விசா கிடைத்து இருந்தால் அவர் உலகிலேயே வேகமாக சைக்கிளில் உலகை சுற்றிய பெண் என்ற பெருமையை பெற்று இருப்பார். இங்கிலாந்தை சேர்ந்த ஜென்னி கிராம் (வயது 38) என்ற பெண் 124 நாட்களில் உலகை சைக்கிளில் சுற்றியதே சாதனையாக உள்ளது.
பெற்றோர் துணையுடன்...
இந்த சாதனை குறித்து வேதங்கி கூறுகையில், ‘‘பெற்றோர் துணையுடன் இந்த சாதனையை படைத்து இருப்பது பெருமையாக உள்ளது. நம் உடன் இருப்பவர்கள் ஆதரவு கிடைக்கும் போது நம்மால் சிறப்பானதை செய்ய முடிகிறது’’ என்றார்.
சாதனை மாணவி வேதங்கி இந்தியாவில் இருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியா பெர்த் நகரத்திற்கு சென்று, தொடங்கிய இடத்திலேயே தனது சாதனை பயணத்தை முடிக்க