பள்ளிக்கூட கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தப்பி ஓடிய தலைமை ஆசிரியருக்கு வலைவீச்சு
பள்ளிக்கூட கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் தப்பி ஓடி விட்டார். போலீசார் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பிளேஸ் பாளையத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக பாஸ்கர் (வயது 53) பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை பள்ளி நேரம் முடிந்ததும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்ற தலைமை ஆசிரியர் பாஸ்கர், அங்கு மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர், அந்த மாணவியை மிரட்டி இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி அனுப்பிவிட்டார்.
வீட்டுக்கு வந்த மாணவி தலைமை ஆசிரியர் தனக்கு அளித்த பாலியல் தொல்லை குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி பென்னாலூர்பேட்டை போலீசில் உடனடியாக புகார் செய்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தலைமை ஆசிரியர் பாஸ்கர் தலைமறைவாகி விட்டார். தப்பி ஓடிய அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பாலியல் தொல்லை புகாரில் சிக்கியுள்ள தலைமை ஆசிரியர் பாஸ்கர் ஏற்கனவே கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு வேலூரில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றிய போதும் இதேபோல் சர்ச்சையில் சிக்கியவர் ஆவார்.
இதனால்தான் அவரை பிளேஸ் பாளையம் பள்ளிக்கு இடமாற்றம் செய்து இருந்தனர். தற்போது பாஸ்கர் மீண்டும் அதே பிரச்சினையில் சிக்கி உள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.