தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு வெகுமதி வழங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா பாராட்டினார்.;

Update: 2018-12-23 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு வெகுமதி வழங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா பாராட்டினார்.

ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமை தாங்கினார். கூட்டத்தில், குற்றங்கள் நடக்காத வகையில் தடுப்பது, நடந்த குற்றங்களில் விரைந்து நடவடிக்கை எடுத்து எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது, சாலை விபத்துக்களை தவிர்ப்பது, விபத்தில் பாதிக்கப்பட்டோரை விரைந்து காப்பாற்றி, அவர்களுக்கு சிகிச்சையளிப்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

பாராட்டு

அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்நாராயணன், ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் என 25-க்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, பாராட்டி வெகுமதி வழங்கினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரகாஷ், முத்தமிழ், திபு, சகாய ஜோஸ், பாலசந்திரன், ஜெபராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்