334 பேருக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர்கள் வழங்கினர்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் திருமண நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2018-12-22 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், பொன்னேரி எம்.எல்.ஏ.வுமான சிறுணியம் பலராமன், அம்பத்தூர் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர், முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளருமான கமாண்டோ பாஸ்கரன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் செவ்வை சம்பத்குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் புட்லூர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், தமிழ்ஆட்சி மொழி கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், வேணுகோபால் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் 344 பேருக்கு 344 பவுன் தங்கமும், ரூ.1 கோடியே 24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி, கூட்டுறவு வேளாண்மை சங்க தலைவர் எஸ்.ஏ.நேசன், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே.சுதாகர், கடம்பத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட சமூகநல அலுவலர் (பொறுப்பு) ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்