சாதி, மதங்களில் உள்ள வேகத்தடையை மோடி அரசு அகற்றி வருகிறது மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பேச்சு
சாதி, மதங்களில் உள்ள வேகத்தடைகளை மோடி அரசு அகற்றி வருவதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
மும்பை,
சாதி, மதங்களில் உள்ள வேகத்தடைகளை மோடி அரசு அகற்றி வருவதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
கண்காட்சி
மும்பை பாந்திரா-குர்லா காம்ப்ளக்சில் ‘ஹுனார் காத்’ என்ற கைவினைப்பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி, வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
கண்காட்சியை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:-
வேகத்தடைகள்
சுயதொழில் சார்ந்த திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் ‘ஹுனார் காத்’ திட்டம் மோடி அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் நமது பாரம்பரிய பொருட்கள் அதிக அளவில் சந்தைக்கு வருகிறது.
இந்த திட்டத்தால் கடந்த ஒரு ஆண்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
மேலும் மோடி அரசு சாதி, மதங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்றும் நோக்கில் அதிவேக பாதைகளை உருவாக்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.