விபத்துகளில் இருந்து தப்பிக்க இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்
விபத்துகளில் இருந்து தப்பிக்க இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார்.
கரூர்,
தமிழக அரசானது பணிக்கு செல்லும் பெண்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கி வருகிறது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி கரூர் அட்லஸ் கலையரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, 423 பெண்களுக்கு ரூ.1 கோடியே 4 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான அம்மா ஸ்கூட்டர்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய நாட்டிலேயே தமிழகத்தில்தான் பணிபுரியும் பெண்களுக்கு எளிதில் செல்லும் வகையில் இருசக்கர வாகனங்கள் வழங்க 50 சதவித மானியம் வழங்கப்படுகிறது. கரூரில் கடந்த மார்ச் மாதம் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு 94 பயனாளிகளுக்கு ரூ.23½ லட்சம் அரசு மானிய மதிப்பிலான ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று (நேற்று) 2-வது கட்டமாக ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் 1,535 மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்க இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு தேர்வு குழு மூலம் பயனாளிகள் தேர்வுசெய்யப்பட்டு மானிய உதவி வழங்கப்படுகிறது. போக்குவரத்து விதியை மீறி செல்வதாலேயே தான் பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன. எனவே தலைக்கவசம் அணிந்து தான் இருசக்கர வாகனங்களை இயக்க வேண்டும். மேலும் சாலைவிதிகளை கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக கரூரை மாற்ற வேண்டும். அந்த வகையில் ஓட்டுனர் உரிமம் அளிப்பதற்கு சரியான முறையில் ஆட்களை தேர்வு செய்யும் விதமாக, இந்தியாவிலேயே கரூரில்தான் முதல்முறையாக கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான தேர்வுதளம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து எதிர்பாராத விபத்துக்களால் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொதுநிவாரண உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பிலான காசோலையினை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் பாலசுப்பிரமணியம், கரூர் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, உதவி திட்ட அதிகாரி குமாரசாமி, வட்டாட்சியர் (மண்மங்கலம்) ரவிக்குமார் மற்றும் மாவட்ட அவை தலைவர் காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.திருவிகா, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் என்.தானேஷ், கரூர் நகர ஜெ.பேரவை செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர்கள் மார்க்கண்டேயன், விநாயகம், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.