பாண்டுப் பகுதியில் குழந்தையை தாக்கிய குள்ளநரி

பாண்டுப்பில் குழந்தையை தாக்கிய குள்ளநரி மீட்கப்பட்டது.;

Update: 2018-12-21 23:30 GMT
மும்பை, 

பாண்டுப்பில் குழந்தையை தாக்கிய குள்ளநரி மீட்கப்பட்டது.

குழந்தையை தாக்கியது

மும்பை பாண்டுப், பாண்டுபேஷ்வர் பகுதியில் உள்ள வீட்டில் ஜிகார் கல்தானியா என்ற 8 மாத குழந்தை விளையாடி கொண்டு இருந்தது. அப்போது அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து தப்பி வந்த குள்ளநரி ஒன்று திடீரென அந்த குழந்தையை தாக்கியது. இதேபோல குள்ளநரி அந்த பகுதியில் நாய் குட்டி ஒன்றையும் தாக்கியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் குள்ளநரியை பிடித்து கட்டிப்போட்டனர். பின்னர் இதுகுறித்து விலங்கு நல அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர்.

குள்ளநரி மீட்பு

அவர்கள் விரைந்து சென்று குள்ளநரியை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மிகவும் சோர்ந்திருந்த குள்ளநரிக்கு தானேயில் உள்ள விலங்குகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல குள்ளநரி தாக்கியதில் முகம், தலை, கை பகுதியில் காயமடைந்த 8 மாத குழந்தை ஜிகார் கல்தானியாவிற்கு மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்