கலெக்டரிடம் கஜா புயல் நிவாரணம் வழங்கிய மாணவன்

கஜா புயல் நிவாரணம் கலெக்டரிடம் மாணவன் வழங்கினான்.

Update: 2018-12-21 22:40 GMT
திருத்தணி,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திருத்தணி நகராட்சி வளாகத்தில் புயல் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருத்தணியில் உள்ள தளபதி விநாயகம் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளியின் சார்பில் தாளாளர் பாலாஜி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் திருத்தணி தாசில்தார் செங்கலா, பள்ளியின் முதல்வர் சத்யா, துணை முதல்வர் விநாயகம், தலைமை ஆசிரியர் சுமதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அதே பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் குமரன் என்ற மாணவன் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூ.1,121-ஐ கலெக்டரிடம் வழங்கினான். மாணவனின் செயலை பாராட்டிய கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

மேலும் செய்திகள்