திருச்சி மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ரூ.500 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.500 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
திருச்சி,
ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக் தலைமை தாங்கினார். இதில் வங்கிகளின் அதிகாரிகள் செல்வராஜ், சந்தானம், பாலையா, ராஜகோபால், மணிவண்ணன், சகாயராஜ், மனோகர், முரளிதரன், குமாரவேல் மற்றும் பெண் அதிகாரிகள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர். வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, வங்கிகளில் பண பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் அதிகாரிகள் வங்கிகளில் வேலையில் இல்லாததால், அவர்கள் அமர்ந்து பணியாற்றிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
இது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக் கூறியதாவது:-
வங்கிகள் இணைப்பை எதிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்டத்தில் 400 வங்கிகளில் பணியாற்றும் 2,500 அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். அதிகாரிகள் பணியில் இல்லாததால் முக்கிய பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.500 கோடிக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். மையங்களில் பணம் முழுமையாக நிரப்பி வைக்கப்பட்டுள்ளதால், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதில் பாதிப்பு எதுவும் இருக்காது. மேலும் வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானவர்கள் ‘நெட்பேங்கிங்’ வசதி மூலம் பண பரிமாற்றம் செய்து கொள்வதால் பாதிப்பு இருக்காது. அதிக அளவிலான பணம் மற்றும் காசோலை பரிமாற்ற சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் வங்கிகளில் 90 சதவீத பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வங்கிகளுக்கு இன்றும்(சனிக்கிழமை), நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளாகும். இனி திங்கட்கிழமை ஒருநாள் மட்டும் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். 25-ந் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை நாள் என்பதால் அன்றைய தினமும் வங்கிகள் இயங்காது. தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது.
தேனா வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 11-வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் இதுவரை இருந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று கோரியும், வங்கி கிளைகளை மூடுவதை எதிர்த்தும், அதிகாரிகளின் வேலை நேரத்தை வரைமுறை செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் நேற்று நாடு முழுவதும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்திலும் வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள் நேற்று காலை திருச்சி ஜென்னிபிளாசா வளாகத்தில் செயல்படும் இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகம் முன்பு திரண்டனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக் தலைமை தாங்கினார். இதில் வங்கிகளின் அதிகாரிகள் செல்வராஜ், சந்தானம், பாலையா, ராஜகோபால், மணிவண்ணன், சகாயராஜ், மனோகர், முரளிதரன், குமாரவேல் மற்றும் பெண் அதிகாரிகள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர். வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, வங்கிகளில் பண பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் அதிகாரிகள் வங்கிகளில் வேலையில் இல்லாததால், அவர்கள் அமர்ந்து பணியாற்றிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.