ஸ்டெர்லைட் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆலோசனை அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2018-12-21 21:30 GMT
தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

இது குறித்து தூத்துக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேல்முறையீடு செய்யப்படும்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு வந்த உடனே, அரசு மேல்முறையீடு செய்யும் என்று முதல்-அமைச்சர் கூறினார். சட்ட மேல்முறையீடு செல்லும் போது, அந்த வழக்கு வெற்றி பெற வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புதான் உச்சபட்ச தீர்ப்பு.

அரசு அரசாணை வெளியிட்டு, நிர்வாக ரீதியாக அனைத்து பணிகளையும் செய்து உள்ளது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்காக, சட்டவல்லுநர்களுடன், துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும்.

முறைப்படி...

பல்வேறு தரப்பு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆலையின் உரிமத்தை ரத்து செய்வதற்கான அதிகாரம் பெற்ற அமைப்புதான் மாசுகட்டுப்பாட்டு வாரியம். ஆலைக்கு நோட்டீசு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது மக்களை குழப்பும் வேலை. அந்த துறையின் மூலம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அந்த முறைப்படித்தான் செய்து உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

மேலும் செய்திகள்