எடப்பாடி அருகே பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

எடப்பாடி அருகே பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2018-12-21 21:45 GMT
எடப்பாடி,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி அரியாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி அந்த பகுதியில் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 16-ந்தேதி வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயம் ஆனார். இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை எடப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது அந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி சவுரிபாளையம் அருணாசலம் தெருவைச் சேர்ந்த சித்தன் மகன் பிரபாகரன் (வயது 21) என்பவர் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவியை மீட்டு சேலம் காப்பகத்தில் சேர்த்தனர்.

மேலும் செய்திகள்