நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையே இழுபறி

மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முக்கிய தொகுதிகளை முடிவு செய்வதில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே இழுபறி ஏற்பட்டு உள்ளது.

Update: 2018-12-20 23:00 GMT
மும்பை, 

மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முக்கிய தொகுதிகளை முடிவு செய்வதில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே இழுபறி ஏற்பட்டு உள்ளது.

தொகுதி பங்கீடு

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜனதாவை வீழ்த்த, மராட்டியத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது.

இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளன. ஏறக்குறைய 80 சதவீத தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இழுபறி

இதில் 7 முதல் 8 வரையிலான முக்கியமான நாடாளுமன்ற தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதை முடிவு செய்வதில் இழுபறி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறுகையில், ‘‘தொகுதி பங்கீட்டில் உள்ள பிரச்சினைகள் விரைவில் பேசி தீர்க்கப்படும். நேற்று சிறிய கட்சிகளுக்கு கூட்டணியில் இடமளிப்பது குறித்து பேசினோம். இதற்காக இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சுவாபிமானி சேத்காரி சங்கத்தனா தலைவர்களையும் சந்தித்து வருகிறோம்’’ என்றார்.

மேலும் செய்திகள்