புயல் நிவாரணம் வழங்க கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கிராம நிர்வாக அலுவலகத்தையும், அதிகாரியையும் முற்றுகையிட்டனர்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் கடந்த மாதம் 16-ந் தேதி வீசிய கஜா புயலால் அதிக அளவில் தென்னை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. அவற்றுக்கு இழப்பீடு வழங்க கோரியும், விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச மும்முனை மின்சாரம் வழங்க கோரியும், தமிழக அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படும் 27 பொருட்கள் தொகுப்பை அனைவருக்கும் வழங்க கோரியும் நேற்று ஆயிங்குடி, அரசர்குளம், வல்லவாரி, மாத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமையில் சண்முகநாதன், பொன்கருப்பையா முன்னிலையில் வல்லவாரி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த அறந்தாங்கி கோட்டாட்சியர் பஞ்சவர்ணம், அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்நிலையில் அறந்தாங்கி அருகே பெரியாளூர், வல்லவாரி ஆகிய பகுதிகளில் கஜா புயலால் சேதமடைந்த வீடுகள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்த தாள்கள் வல்லவாரி பெரியகுளத்து கரையில் கிடந்தன. அவற்றை பொதுமக்கள் எடுத்து வந்து மெய்யநாதன் எம்.எல்.ஏ.விடம் ஒப்படைத்தனர்.
மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும், மும்முனை மின்சாரம் வழங்க கோரியும் அறந்தாங்கி அருகே உள்ள குரும்பூர்மேடு, ஒத்தக்கடை பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி போலீசார், பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
இதேபோல் புயல் நிவாரணம் கேட்டு கந்தர்வகோட்டை அருகே உள்ள வடுகப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கந்தர்வகோட்டை-திருச்சி சாலையில் வடுகப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கே.செட்டிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த கானாப்பூர், கே.செட்டிப்பட்டி, ஆனைவாரி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிவாரண பொருட்கள் வழங்காததை கண்டித்து கே.செட்டிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போட்டு பூட்டினர். 2 மணி நேரத்துக்கு மேலாகியும் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து விட்டு கலைந்து சென்றனர்.
மேலும் ராயவரம் பஸ் நிலையம் அருகே ஆயிங்குடி, குழுமங்குடி, வளையன்வயல் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன், கே.புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் கவுரி ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடியில், 410 பேருக்கு ஏற்கனவே நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களுக்கு டோக்கன் வழங்க கிராம நிர்வாக அதிகாரி திருவருட்செல்வன் கிளிக்குடிக்கு வந்தார். அப்போது அவரை, அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு அனைவருக்கும் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்னர், அவரிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட கிராம நிர்வாக அதிகாரி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
ஆனால், அவரை மோட்டார் சைக்கிளில் செல்ல விடாமல் மீண்டும் மறித்து விடுபட்டவர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அன்னவாசல் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிராம நிர்வாக அதிகாரியை மீட்டு அனுப்பி வைத்தனர்.