வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்கார வழக்கு: கைதான 2 பேரிடம், காணொலிக்காட்சி மூலம் நீதிபதி விசாரணை
கும்பகோணத்தில் வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரிடம், காணொலிக்காட்சி மூலம் விசாரணை நடத்திய நீதிபதி, அவர்களுக்கு வருகிற 2-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார்.
கும்பகோணம்,
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவருக்கு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதற்கான பயிற்சியை பெறுவதற்காக அந்த பெண், ராஜஸ்தானில் இருந்து கடந்த 2-ந் தேதி இரவு கும்பகோணம் வந்தார். கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து அந்த பெண் தான் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினார். ஆனால் ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை, கும்பகோணம் அருகே உள்ள செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இறக்கி விட்டு சென்றார். இதனால் பரிதவித்து நின்ற அந்த பெண்ணை, சிலர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து அந்த பெண் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த தினேஷ், வசந்த், அன்பரசன், புருஷோத்தமன் ஆகிய 4 பேருக்கு தொடர்பு இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சிறையில் உள்ள தினேஷ், வசந்த் ஆகியோரிடம் நேற்றுமுன்தினம் காணொலிக்காட்சி மூலம் விசாரணை நடந்தது.
இந்த நிலையில் வங்கி பெண் ஊழியர் பலாத்கார வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருச்சி மத்திய சிறையில் உள்ள புருஷோத்தமன், அன்பரசு ஆகிய 2 பேரிடம் நீதிபதி கோதண்டராஜ், காணொலிக்காட்சி மூலம் விசாரணை நடத்தினார். இதில் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி வரை இருவருக்கும் காவல் நீட்டிப்பு வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.