நாராயணசாமி நாயுடு நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் தொடர் ஜோதி ஓட்டம் தொடங்கியது

நாராயணசாமி நாயுடு நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் தொடர் ஜோதி ஓட்டம் தொடங்கியது.;

Update: 2018-12-20 21:45 GMT
கோவில்பட்டி,

நாராயணசாமி நாயுடு நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் தொடர் ஜோதி ஓட்டம் தொடங்கியது.

நாராயணசாமி நாயுடு நினைவு தினம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு கடந்த 21-12-1984 அன்று தேர்தல் பிரசாரத்துக்காக கோவில்பட்டிக்கு வந்தபோது, அங்குள்ள பயணியர் விடுதியில் தங்கினார். அப்போது அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது 34-வது ஆண்டு நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, கோவில்பட்டி பயணியர் விடுதியில் நாராயணசாமி நாயுடு மறைந்த அறையில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்துக்கு பாரதீய கிசான் சங்கத்தினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நாராயணசாமி நாயுடுவின் நினைவிடம் அமைந்துள்ள அவரது சொந்த ஊரான கோவை அருகே வையம்பாளையத்துக்கு தொடர் ஜோதி ஓட்டம் புறப்பட்டது.

தொடர் ஜோதி ஓட்டம்

பாரதீய கிசான் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயகலு ஜோதியை எடுத்து, மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை தலைவர் சிவன்ராஜிடம் வழங்கினார். தொடர்ந்து இளைஞர்கள் ஜோதியை ஏந்தியவாறு தொடர் ஓட்டமாக புறப்பட்டனர். வாகனங்களிலும் இளைஞர்கள், விவசாயிகள் அணிவகுத்து சென்றனர். தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி, பாரதீய கிசான் சங்க மாவட்ட துணை தலைவர் பரமேசுவரன், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் மாரியப்பன், மாநில பொதுச்செயலாளர் சரவணன், இயற்கை விவசாயிகள் சங்கம் கருப்பசாமி, கம்மவார் சங்க தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்