அரசு பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்; கல்வித்துறை அமைச்சர் வலியுறுத்தல்

அரசு பொதுத் தேர்வில், மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வலியுறுத்தினார்.

Update: 2018-12-20 00:07 GMT
காரைக்கால்,

வருகிற பொதுத் தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறச் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கேசவன் முதன்மை கல்வி அதிகாரி அல்லி, பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில், அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:-

வருகிற பொதுத்தேர்வில், காரைக்கால் மாவட்ட மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், கடந்த ஆண்டு காரைக்காலில் 7 பள்ளிகள் 90 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். எனவே வரும் ஆண்டு அனைத்து அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக 100 சதவிகிதம் மாணவர்களை தேர்ச்சிபெற பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.

மேலும் செய்திகள்