கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகளை தாக்க முயன்ற வாலிபர் கைது
கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகளை தாக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகர் பிலிஸ்வில்லா பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 27). இவர் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்த சோப் ஆயிலை குடித்துள்ளார். இதனால் அவரை உறவினர்கள் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அவருக்கு நர்சுகள் சிகிச்சை அளித்தனர். அப்போது அவர்களை வடிவேல் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தாக்கவும் முயன்றார். அத்துடன் அவர்கள் சிகிச்சைக்காக வைத்திருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ கருவிகளையும் உடைத்தார்.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் வழக்குப்பதிவு செய்து வடிவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.