இளநிலை பொறியாளர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட திரண்டதால் பரபரப்பு
திருச்சியில் இளநிலை பொறியாளர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருச்சி,
திருச்சி மாநகராட்சி 12-வது வார்டில் மதுரை ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும், மதுரை ரோடு, வள்ளுவர் நகர் எதிர்புறம் சாக்கடை கால்வாய் முறையாக அமைக்க வேண்டும், 12-வது வார்டு பகுதியில் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மரக்கடையில் உள்ள மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் நிர்வாகிகள் அப்துல் பஷீர், விஜயகுமார் உள்பட பலர் நேற்று காலை மரக்கடை அருகே முற்றுகையிட திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு காந்திமார்க்கெட் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். கோரிக்கைகள் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் மூலம் சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் கோடிலிங்கம், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, இளநிலை பொறியாளர் புஷ்பராணி உள்பட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், சுகாதார துறை அதிகாரிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மதுரை ரோட்டில் ராமகிருஷ்ணா பாலம் முன்பு வேகத்தடை அமைக்கப்படும் எனவும், மதுரை ரோட்டில் இரு புறமும் உள்ள மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர் வாரப்படும், வள்ளுவர் நகர், ஜீவா நகர், நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதிகளில் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.