வீரப்பன்சத்திரத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-12-19 21:27 GMT

ஈரோடு,

ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் குருகுணசேகர், கலைச்செல்வி, மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்ட பொறுப்பாளர் வைரவேல், மாநில செயலாளர் டாக்டர் சி.கே.சரஸ்வதி, மாநில பிரசார அணி பொறுப்பாளர் ஏ.சரவணன் ஆகியோர் பேசினார்கள். ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தவறாக பிரசாரம் செய்வதாக கூறி அதை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட செயலாளர்கள் ஏ.பி.கிருஷ்ணகுமார், பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெரியசேமூர் மண்டல தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்