மேல்மருவத்தூரில் பக்தர்களிடம் பணம் திருட்டு; பெண் உள்பட 2 பேர் கைது
மேல்மருவத்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம், செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மேற்பார்வையில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் உள்ளிட்ட போலீசார் மேல்மருவத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 40), புதுச்சேரியை சேர்ந்த சுகுணா (40) என்பது தெரியவந்தது. அவர்கள் மேல்மருவத்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம், செல்போன் போன்றவற்றை திருடியதை ஒப்புக்கொண்டனர். போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.