வானவில் : தோட்ட வேலை பார்க்கும் ‘ரோபோ’

மாறுபட்ட வடிவங்களில் பற்பல தேவைகளுக்கு பயன்படும் பல விதமான ரோபோக்களை பற்றி பார்த்து வருகிறோம்.

Update: 2018-12-19 09:03 GMT
மனிதர்களின் வேலையை சுலபமாக்குவதற்கெனவே நாளுக்கு நாள் புதுப்புது ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘கார்டன் ஸ்பேஸ்’ எனப்படும் இந்த ரோபோ தோட்டங்களை பராமரிக்கும் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ளது. செடிகளுக்கு தேவையான தண்ணீரை அவ்வப்போது ஊற்றுவது, களைகளை நீக்க அறிவுறுத்துவது என செடிகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறது. ஒவ்வொரு தாவரத்தின் பச்சையம் (chlorophyll) அளவு, அதன் வாழ்நாள், தட்ப வெப்ப நிலை, மண்ணுடைய தன்மை என்பன போன்ற சகல விதமான தகவல்களையும் நமக்கு ஆப் மூலம் தெரியப்படுத்தும். மேலும் இதன் சிறப்பம்சம் என்னவெனில் இது முற்றிலும் சோலார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. எனவே இந்த ரோபோவினால் மின்சார செலவு ஏற்படாது. செடிகளின் மீது அமரும் பூச்சிகள் மற்றும் பறவைகளை சென்சார் மூலம் அறிந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டுகிறது இந்த பச்சை ரோபோ. தற்போதைக்கு நூறு சதுர அடி பரப்பளவை மட்டுமே கண்காணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோ வெகு விரைவில் மிகப் பெரிய பரப்பளவுகளை பராமரிக்கும் வகையில் உருவாக்கப்படும் என்கின்றனர், இதன் நிறுவனர்கள்.

மேலும் செய்திகள்