வெல்லத்தில் கலப்படம் செய்வதை தடுக்க வேண்டும் கரும்பு விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை
வெல்லத்தில் கலப்படம் செய்வதை தடுக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்,
சேலம் செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள வெல்ல ஏல மண்டியில் நேற்று முன்தினம் சேலம் மாவட்ட கரும்பு மற்றும் வெல்லம் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டு பேசும் போது, வெல்லத்தில் சர்க்கரை கலப்படம் செய்யப்படுவதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.
இதனால் வெல்ல உற்பத்தியாளர்களுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி, மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து பேசினர். அப்போது கலெக்டரிடம் அவர்கள், வெல்லத்தில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே வெல்லத்தில் கலப்படம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேலம் மாவட்ட கரும்பு மற்றும் வெல்லம் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் சங்கத்தில் எங்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
இது பற்றி கரும்பு விவசாயிகள் கூறும் போது, ‘வெல்லத்தில் அதிகளவு சர்க்கரை உள்ளிட்டவைகளை கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதால் எங்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் கலப்படம் என்று பறிமுதல் செய்யப்பட்ட வெல்லத்தை அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்து விடுகின்றனர். இதனால் வெல்லத்தில் தொடர்ந்து கலப்படம் செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்பது குறித்து கலெக்டரிடம் எடுத்து கூறி உள்ளோம்‘ என்றனர்.