மருத்துவ கல்வி கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசனை சட்டசபையில் மந்திரி டி.கே.சிவக்குமார் பதில்
கர்நாடகத்தில் மருத்துவ கல்வி கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என்று சட்டசபையில் மந்திரி டி.கே.சிவக் குமார் கூறினார்.
பெலகாவி,
கர்நாடகத்தில் மருத்துவ கல்வி கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என்று சட்டசபையில் மந்திரி டி.கே.சிவக் குமார் கூறினார்.
7-வது நாள் கூட்டம்
கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி பெலகாவி சுவர்ண சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த குளிர்கால கூட்டத்தொடரின் 7-வது நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு ெபலகாவி சுவர்ண சவுதாவில் தொடங்கி நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மருத்துவ கல்வித்துறை மந்திாி டி.கே.சிவக்குமார் பதிலளிக்கையில் கூறியதாவது:-
சம்பளத்தை உயர்த்துவது...
கர்நாடகத்தில் மருத்துவ கல்வி கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கும். அரசு மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.