சங்கரன்கோவிலில் பரபரப்பு பெண் போலீஸ் தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை

சங்கரன்கோவிலில் பெண் போலீஸ் ஒருவர் திடீரென தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-12-18 21:30 GMT
சங்கரன்கோவில், 

சங்கரன்கோவிலில் பெண் போலீஸ் ஒருவர் திடீரென தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் போலீஸ்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவர், தற்போது சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலையில் அவர் வீட்டில் வைத்து அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் வீடு திரும்பினார்.

போலீசார் விசாரணை

அந்த பெண் போலீஸ் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது உடனடியாக தெரியவில்லை. பணிச்சுமை காரணமா அல்லது குடும்ப தகராறு காரணமா? என்பது பற்றி சங்கரன்கோவில் டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவிலில் பெண் போலீஸ் ஒருவர் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்