சுய உதவிக்குழு பெண்களுக்கு பயிற்சி பட்டறை பச்சையப்பன் கல்லூரியில் நடந்தது
பச்சையப்பன் கல்லூரியில் மகளிர் சுய உதவி குழுவுக்கான வேதியியல் சார்ந்த ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
சென்னை,
பச்சையப்பன் கல்லூரி வேதியியல் துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தமிழ்நாடு மகளிர் மன்ற மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து மகளிர் சுய உதவி குழுக்கான வேதியியல் சார்ந்த ஒரு நாள் பயிற்சி பட்டறையை நடத்தியது. பச்சையப்பன் கல்லூரியில் நடந்த இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் என்.சேட்டு தலைமை தாங்கினார். தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் டி.ஜோதி ஜெகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் ஆர்.நந்தினி, துணை தலைவர் பி.வெங்கடேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக நிகழ்ச்சி அமைப்பாளர் ரா.கணேஷ்குமார் வரவேற்றார். இந்த பயிற்சி பட்டறையில் மகளிர் சுய உதவிக்குழுவில் இருந்து பெண்கள் கலந்து கொண்டு சலவைத்தூள், மெழுகுவர்த்தி, பினாயில் தயாரித்தல் போன்றவற்றின் வேதியியல் விளக்கத்தோடு செய்முறை பயிற்சி பெற்றனர்.