பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-17 22:56 GMT
பொன்னேரி,

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்கவேண்டும், பழைய ஓய்வூதியத்தையே மீண்டும் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு வட்டத்தலைவர் சிவா தலைமை தாங்கினார். வட்டசெயலாளர் பொன்னுசாமி, மாவட்ட துணைத்தலைவர் கார்த்திகேயன், மாவட்ட இணைசெயலாளர் நல்லீஸ்வரன், பொருளாளர் ரம்யா உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்