ஸ்ரீபெரும்புதூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எச்.ராஜாவை கண்டித்து ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-17 22:15 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலாளர்கள் தியாகராஜன், கலைவடிவன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு எச்.ராஜாவுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்