ஆவடியில் 4,622 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

ஆவடியில் 4,622 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.

Update: 2018-12-15 22:33 GMT
ஆவடி,

ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 12 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் 4,622 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா ஆவடியில் உள்ள இமாகுலேட் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

விழாவுக்கு திருவள்ளூர் சப்-கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அத்துடன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.44 லட்சத்தில் 11 பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகளையும் அமைச்சர் வழங்கினார்.

இதில் அம்பத்தூர் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர், திருவள்ளூர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியை ரீட்டாமேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்