நாடாளுமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை காணொலி காட்சி மூலம் நடந்தது

நாடாளுமன்ற தேர்தல் குறித்து குமரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-12-15 23:00 GMT
நாகர்கோவில்,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. மத்தியில் ஆளும் பா.ஜனதாவும் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் 5 நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். குமரி மாவட்ட பா.ஜனதா பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் அவர் நடத்திய ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து 6 மணி வரை ஒரு மணி நேரம் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காணொலியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. அதோடு தேர்தல் பணிகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கி உள்ளார். பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சியில் பேசியது அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது.

மேலும் செய்திகள்