‘கஜா’ புயலால் சேதமான வீடுகள்: பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் நிவாரணம் செலுத்தப்படும் - கலெக்டர் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் நிவாரணத் தொகை செலுத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.;
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் அபிவிருத்தி பணிகள் ரூ.2 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் டி.ஜி.வினய் நேற்று பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தோட்டக்கலைத்துறையின் மூலம் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும். மாவட்டத்தில் கொடைக்கானல் தாலுகா ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 454 வீடுகள் ‘கஜா’ புயலால் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ‘கஜா’ புயலால் கொடைக்கானல் பகுதியில் 5 ஆயிரத்து 500 ஹெக்டேர் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதில் ரூ.9½ கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தொகை கிடைத்த உடன் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
பூண்டி கிராமத்தில் உள்ள நீர்த்தேக்கம், வத்தலக்குண்டு சாலையில் சேதம் ஏற்பட்டவை தற்காலிகமாக சீரமைக் கப்பட்டுள்ளது. நிதி கிடைத்த உடன் நிரந்தர சீரமைப்பு பணிகள் நடைபெறும். சாலை ஓரங்களில் உள்ள மரங்கள், கலையரங்கம் பகுதியில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது ஆர்.டி.ஓ. சிவக்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் நாராயணசாமி, தாசில்தார் ரமேஷ், வேளாண் பொறியியல்துறை உதவி பொறியாளர் சக்திவேல், பூங்கா மேலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை சிறப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான விழிப்புணர்வு கூட்டம் வில்பட்டி ஊராட்சி கோவில்பட்டி கிராமத்தில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் கலந்துகொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்ததுடன், தனியார் பங்களிப்பும் தொடர வேண்டும் எனவும் கேட்டுகொண்டார். இதில் மாவட்ட திட்ட அதிகாரி கவிதா, வட்டார வளர்ச்சி அதிகாரி மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சில்வஸ்டர் நன்றி கூறினார்.