கரூரில் தேசிய திறனறி தேர்வை 2,321 மாணவ, மாணவிகள் எழுதினர்

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் தேசிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது.

Update: 2018-12-15 22:15 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் தேசிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலும் போது மாதா மாதம் உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில் கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மையங்களில் நேற்று தேசிய திறனறி தேர்வு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக 2,392 மாணவ, மாணவிகள் தகுதி பெற்றனர். இதில் 2,321 பேர் கலந்து கொண்டு தேர்வை எழுதினர். 71 மாணவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை. காலை 9.30 மணி முதல் 11 மணி வரை கணிதம், உளவியல் சம்பந்தமான கேள்விகள் அடங்கிய தேர்வு நடந்தது. பின்னர் சிறிது இடைவேளைக்கு பிறகு 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை அறிவியல், வரலாறு உள்ளிட்ட பாடம் சார்ந்த தேர்வு நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தங்கவேல் உள்ளிட்ட அதிகாரிகள், தேர்வு மையங்களுக்கு நேரடியாக சென்று குறித்த நேரத்தில் தேர்வு தொடங்கி விட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து, மாணவர்களின் வருகை பதிவை கேட்டறிந்தனர். 

மேலும் செய்திகள்