ஓநாய்களை வளர்க்கும் இளம்பெண்

ஓநாய்களை வளர்க்கும் இளம்பெண் ஒருவர் இணையத்தில் புகழ்பெற்றிருக்கிறார்.

Update: 2018-12-15 10:17 GMT
ஸோ சின்யு என்ற 20 வயது சீனப் பெண், 36 ஓநாய்களை வளர்த்து வருகிறார்.

மங்கோலியப் பகுதியைச் சேர்ந்த ஸோ சின்யுவுக்கு சிறுவயதில் இருந்தே ஓநாய் என்றால் மிகவும் விருப்பமாம். அதன் காரணமாக தனது பண்ணை வீட்டில் அரிய வகையைச் சேர்ந்த 36 வெள்ளை ஓநாய்களை இவர் தற்போது வளர்த்து வருகிறார்.

மிகவும் அபாயகரமான விலங்காகக் கருதப்படும் ஓநாயை கட்டிப்பிடித்துக் கொஞ்சுவதும், உப்பு மூட்டை போல் முதுகில் சுமந்து விளையாடுவதுமாக உள்ள ஸோ சின்யுவின் வீடியோ உலகம் முழுவதும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஸோ தனது பற்களுக்கு இடையே மாமிச உணவுகளை வைத்து அவற்றை ஓநாய்களுக்கு ஊட்டிவிடுகிறார்.

தனது பாசத்துக்குரிய ஓநாய்கள் குறித்து ஸோ கூறும்போது, ‘‘சில நேரங்களில் ஓநாய்கள் குறும்புத்தனமாக இருக்கும். அதனால் நான் உணவு கொடுக்கும்போது அவற்றைச் செல்லமாக அதட்டுவேன்’’ என்கிறார்.

மேலும், ‘‘ஓநாய்கள் என்னைத் தாக்காது, ஆனால் சிலநேரங்களில் அவற்றின் கூர்மையான நகங்கள் என் கைகளில் கீறிவிடும். ஆனால் அது முற்றிலும் எதிர்பாராதவிதமாகத்தான் இருக்கும்’’ என்றும் ஸோ சின்யு சொல்கிறார்.

மேலும் செய்திகள்